தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் பணியிடம் : ஜன.31 கடைசி நாள்!!
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்: புறத்தொடர்பு பணியாளர் - 1 (Out Reach Worker) (தொகுப்பூதியம் ரூ.10592/- (ரூபாய் பத்தாயிரத்து ஐநூற்று தொண்ணூற்று இரண்டு மட்டும் மாதமொன்றிற்கு)
கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் வயது: அங்கீகரிக்கப்பட்ட வாரியம் ஃ சமமான் வரியத்தில் இருந்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும். பணி அனுபவமுள்ள விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது: 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
Also read.... போக்குவரத்து சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூத்துக்குடி காவலருக்கு குவியும் பாராட்டுகள்!
மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்ககுறிப்புகள் (www.thoothukudi.nic.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதற்கென அமைந்த படிவத்தில் (Prescribed Format) பூர்த்தி செய்து கல்வி, வயது மற்றும் முன்அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் 31.01.2023 அன்று மாலை 05.30-க்குள் பின்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
176, முத்துச் சுரபி பில்டிங்,
மணிநகர் 2வது தெரு, பாளை ரோடு,
தூத்துக்குடி 628 003.
தொலைபேசி எண்;: 0461 - 2331188
=++++++++++++++++++++++++++++
தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் செய்திகள் முதல் உலகம் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News, Thoothukudi news,), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் டூட்டி விஷன் நியூஸ் (www.tutyvision.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Whatsapp Group: Click Here...