தோல் நோய் பாதித்த நபர்களுக்கு 100 நாள் வேலைக்கு பதிலாக மாற்று வேலை வழங்க கோரிக்கை!
தோல் நோய் பாதித்த நபர்களுக்கு 100 நாள் வேலைக்கு பதிலாக மாற்று வேலை வழங்க கோரிக்கை!
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தோல் வெடிப்பு நோயால் பாதிக்கபட்ட அக்கா, தம்பி 100 நாள் வேலைக்கு பதிலாக மாற்று வேலை வழங்க கோரி மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, கரடிகுளம் சிஆர் காலனி பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் தேவராஜ் (56) மற்றும் அவரது அக்கா செல்வ ரானி (53) ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் இருவரும் 100 நாள் வேலை பார்த்து வருகின்றோம். எங்கள் இருவருக்கும் குலநீத் எனப்படும் தோல் வெடிப்பு நோயால் பாதிக்கபட்டுள்ளோம். இந்த நோய் காரணமாக 100 நாள் வேலையின்போது வெயிலில் நின்று வேலை பார்க்கும்போது தோல்கள் வெடிப்பு ஏற்படுவதால் மிகவும் சிறமத்திற்கு ஆளாகியுள்ளோம், எங்களுக்கு எந்த ஒரு ஆதரவும் கிடையாது. எனவே இரண்டு பேருக்கும் வெயிலில் இல்லாத வாரு மாற்று பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.