புதியம்புத்தூர் பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை!
ஆட்சியர் அலுவலகத்தில் புதியம்புத்தூர் பிரதான சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி0 திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட கட்சியினர் மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் புதியம்புத்தூர் பிரதான சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட கட்சியினர் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஜூன் 12ஆம் தேதி திராவிடர் கழக நெல்லை மண்டல தலைவர் காசி தலைமையில் திராவிடர் கழக நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டாக மனு அளித்தனர்.
தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களின் காரணமாக இயல்பாக திரும்ப முடியாத நிலை காணப்படுகிறது, மேலும் சாலையின் ஓரமாக உள்ள மேல்நிலைப்பள்ளியில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் நிற்பதற்கு கூட இடமில்லாத நிலை உள்ளது. நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ஆவின் பாலகம் மற்றும் பிற கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தும் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுமக்கள் நலன் கருதி புதியம்புத்தூர் பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.