தூத்துக்குடி மாநகரில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!
தூத்துக்குடியில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் நீதிமன்றம் அருகில் இருந்து 3வது மைல் வரையிலான தார் சாலை தோண்டப்பட்டு நீண்ட் நாட்கள் ஆகியும் இந்த சாலையானது சரி செய்யப்படவில்லை. தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி ஆபீஸ், ஆர்.டி.ஓ ஆபிஸ், அதேபோல் தூத்துக்குடி நகரித்திற்குள் வருபவர்கள் பயன்படுத்தக்கூடிய முக்கிய சாலையாகும். தோன்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும், சாலை பணி நடைபெறவில்லை
அதேபோல் சரியாக சாலை ஜல்லிகளை அகற்றமால் இருப்ப்தால் அதிகளவில் தூசியும் கிளம்புகிறது, அடிக்கடி இரு சக்கர வாகணத்தில் செல்பவர்கள் கீழே விழும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே மக்கள் அதிகளவில் பயன்படுத்த க்கூடிய இந்த சாலைப் பணியை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.