தூத்துக்குடியில் கடல் சீற்றம்: முத்துநகர் கடற்கரை, ரோச் பார்க் மூடல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தூத்துக்குடியில் கடல் சீற்றம்: முத்துநகர் கடற்கரை, ரோச் பார்க் மூடல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தூத்துக்குடி-யில் கடல் சீற்றம் காரணமாக கடல் சார்ந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்கினை களிப்பவர்கள் மற்றும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொவோர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் இன்று அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக கடலில் குளிக்கவும் கடற்கரை அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் கடற்கரை அருகே அமைந்துள்ள தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா மற்றும் ரோச் பார்க் ஆகிய கடற்கரை பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பூங்காக்களை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதைத்தொடர்ந்து முத்துநகர் கடற்கரை பூங்கா,ரோச் பார்க் உள்ளிட்ட கடற்கரை பூங்காக்கள் இன்று விடுமுறை என வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது மேலும் கடல் சீற்றம் காரணமாக கடல் சார்ந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்கினை களிப்பவர்கள் மற்றும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொவோர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்.