பரபரப்பு! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை எதிரொலி... தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் 9 வருவாய் ஆய்வாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

பரபரப்பு! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை எதிரொலி... தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் 9 வருவாய் ஆய்வாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிரடி சோதனையின் எதிரொலியாக, நிர்வாக நலன் கருதி 9 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியராக திருமணி ஸ்டாலின் பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஜூலை 17-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் நிலையில் நிர்வாக நலன் கருதி அதிரடி பணியிட மாற்றம் மற்றும் நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உத்தரவின்படி, மாற்றப்பட்ட அனைத்து அலுவலர்களும் உடனடியாக புதிய பணியிடங்களில் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த உத்தரவு தொடர்பாக எந்தவித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள்:

ஜெயப்பிரகாஷ் – தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) அலுவலகத்திலிருந்து வெள்ளமடம்–ஏரல் விண்வெளி தொழிற்பூங்கா அலகு-3 தனி வருவாய் ஆய்வாளராக மாற்றம்.

மஞ்சுளா – வெள்ளமடம்–ஏரல் விண்வெளி தொழிற்பூங்கா அலகு-3 இலிருந்து தூத்துக்குடி கோட்டக்கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக டி-பிரிவில் மாற்றுப் பணியில் நியமனம்.

நல்லபெருமாள் – ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லாநத்தம் சிப்காட் அலகு-2 இலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்புப் பிரிவு தனி வருவாய் ஆய்வாளராக மாற்றம்.

உமா சங்கர் – மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்புப் பிரிவிலிருந்து தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) அலுவலகத்திற்கு மாற்றம்.

ஜான்ராஜ் மேக்டன் – தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லாநத்தம் சிப்காட் அலகு-2 முதுநிலை வருவாய் ஆய்வாளராக மாற்றம்.

மெர்சி – சிப்காட் அலகு-1 இலிருந்து சிப்காட் தெற்கு வீரபாண்டியபுரம் அலகு-2 தனி வருவாய் ஆய்வாளராக மாற்றம்.

மகேஸ்வரன் – சிப்காட் தெற்கு வீரபாண்டியபுரம் அலகு-2 இலிருந்து சிப்காட் அலகு-1 முதுநிலை வருவாய் ஆய்வாளராக மாற்றம்.

மகாராஜா – மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக மாற்றம்.

வசந்தகுமார் – ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனி வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டு, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையைத் தொடர்ந்து வெளியான இந்த அதிரடி பணியிட மாற்ற உத்தரவு, தூத்துக்குடி வருவாய்த் துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகாரிகள் மத்தியில் இது முக்கிய நிர்வாக நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.