விளாத்திகுளம் அருகே தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை: ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை!

விளாத்திகுளம் அருகே தீண்டாமை சுவரை அகற்ற நடவடிக்கை: ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை!

சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக ஆதி திராவிட சமுதாய நலத் தலைவர், முன்னாள் ஊாட்சி மன்றத் தலைவர் ஜான் போஸ்கோ தலைமையில், கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரம் கிராமத்தில் ஜோதிலட்சுமி என்பவரும் அவரது மகன்களும் 200 மீட்டர் தூரத்திற்கு தீண்டாமை சுவரை கட்டியுள்ளனர். 

60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சுவர் உள்ளது. மேலும் அவர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கையகப்படுத்த முயல்கிறார்கள். இதற்கு தலையாரி முதல் தாசில்தார் வரை அனைவரும் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

----------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE