தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே பாத்ரூம் கழிவுநீர் பொங்கி வழியும் அவலம்: நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே பாத்ரூம் கழிவுநீர் பொங்கி வழியும் அவலம்: நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (ஜி.எச்.) மற்றும் அருப்புரம் பகுதி அருகே உள்ள பாத்ரூம்களில் இருந்து கழிவுநீர் பொங்கி வெளியேறும் பிரச்சினையால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, பாத்ரூம் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் காரணமாக கழிவுநீர் சரிவர வெளியேறாமல், மீண்டும் மேலே பொங்கி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் , பொதுமக்கள் மற்றும் சிபி எம் மாநகர் செயலாளர் எம் எஸ் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிபி எம் மாநகர் செயலாளர் எம் எஸ் முத்து கூறுகையில், "ஜி.எச். மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு கழிவுநீர் பொங்கி வழிவது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம்  உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்" என்றார்.

கழிவுநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகளில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி, முழுமையான ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது. மேலும், அடைப்புகள் மற்றும் சேதமடைந்த வடிகால் அமைப்புகளை சரிசெய்தால் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என கூறினார்...