தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி : ஒட்டிய விரல்கள் பிரிக்கப்பட்டது!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ஒட்டிய விரல்கள் பிரிக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயதுமிக்க சிறுமிக்கு ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்யப்பட்டது. இந்த குழந்தை பிறக்கும் போது வலது கையில் மூன்று மற்றும் நான்காம் விரல்கள் ஒட்டி இருந்தது. இதனால் விரலில் அசைவு குறைவாகவும் செயல் திறன் குறைவாகவும் மற்ற குழந்தை போல் சாப்பிட இயலாமலும் விளையாட எழுத முடியாமல் இருந்தது.
இதற்கு ஒட்டுறுப்பு சிகிச்சை துறையில் அறுவை சிகிச்சை செய்து விரல் பிரிக்கப்பட்டு 7.7.2022 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒட்டுறுப்பு துறை டாக்டர்கள், ராஜ்குமார் அருணா தேவி, பிரபாகர் ராஜா ஆகியோர் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். தற்சமயம் பிரிந்த விரல்கள் நன்றாக செயல்பட்டு கொண்டுள்ளது. மேலும் எல்லா குழந்தைக்கும் இருப்பது போல் விரல் உள்ளதை கண்டு குழந்தை மற்றும் பெற்றோர் மிகுந்த மகிழ்வுடன் உள்ளனர்.