தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.303 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் பேட்டி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.303 கோடியாக உயர்ந்துள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சலீ எஸ் நாயர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகரமதிப்பு (Networth) ரூ.8,430 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.7,384 கோடியாக இருந்தது.
இது ரூ.1046 கோடி உயர்ந்து 14.17 % வளர்ச்சி அடைந்துள்ளது. RAM (சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்) 91% யிலிருந்து 92%யாக உயர்ந்துள்ளது. வங்கியானது இந்த அரையாண்டில் 15 புதிய கிளைகளை துவக்கியுள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தும் வசதியுடன் நேரலையில் உள்ளது.
வங்கி வளர்ச்சியின் சிறப்பம்சங்கள் (Year on Year)
1. செயல்பாட்டு லாபம் ₹365 கோடியில் இருந்து ₹465 கோடியாக உயர்ந்து, 27.40% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2. நிகர லாபம் 10.58% அதிகரித்து ₹274 கோடியிலிருந்து ₹303 கோடியாக உயர்ந்துள்ளது.
3. NIM 4.10% 2 4.25% அதிகரித்துள்ளது. 15 bps ஆக அதிகரித்துள்ளது.
4. வட்டி அல்லாத வருமானம் ₹156 கோடியிலிருந்து ₹227 கோடியாக உயர்ந்துள்ளது, இது 45.51% அதிகரித்துள்ளது.
5. மொத்த NPA 1.70% இலிருந்து 1.37% ஆகக் குறைந்துள்ளது, 33 bps மேம்படுத்தப்பட்டுள்ளது.
6. நிகர NPA 0.99% இலிருந்து 0.46% ஆகக் குறைந்துள்ளது, 53 bps மேம்படுத்தப்பட்டுள்ளது.
7. PCR 41.96% இலிருந்து 66.40% ஆக அதிகரித்துள்ளது.
8. மொத்த கடன் தொகையில் SMA ஆனது 5.59% இலிருந்து 4.16% ஆக குறைந்துள்ளது, 143 bps குறைந்துள்ளது.
9. ROA 1.89% இலிருந்து 1.94% ஆக அதிகரித்துள்ளது.
10. CRAR % 26.04% 2 மேம்படுத்தப்பட்டுள்ளது. 29.59% ஆக அதிகரித்துள்ளது, 355 bps அதிகரித்துள்ளது.
11. பங்கின் புத்தக மதிப்பு ₹466 இல் இருந்து ₹532 ஆக அதிகரித்துள்ளது.
வைப்புத்தொகை ரூ.47,314 கோடியில் இருந்து ரூ.49,342 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் தொகை ரூ.37,778 கோடியிலிருந்து ரூ.42,533 கோடியாக உயர்ந்துள்ளது. இது 12.59% வளர்ச்சியை எட்டியுள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.596 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.533 கோடியாக இருந்தது ) இது 11.89% வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது செயல் இயக்குனர் வின்சென்ட், தலைமை நிதி ஆலோசகர் பிஏ கிருஷ்ணன், பொது மேலாளர்கள் அசோக் குமார், ரமேஷ், விஜயன், ஜெயராமன், சுந்தரேஷ் குமார், லட்சுமணன், உதவி பொது மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.