தூத்துக்குடி மாநகரில் நாளை (டிச.17) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ஒத்திவைப்பு!!

தூத்துக்குடி மாநகரில்  நாளை (டிச.17) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ஒத்திவைப்பு!!

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை (டிச.17) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு 110/22 கே.வி நகர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை 17.12.2024 அன்று மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.  நிர்வாக காரணங்களால், மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வழக்கம்போல் மின் விநியோகம் வழங்கப்படும். மேலும் பராமரிப்பு பணிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தூத்துக்குடி நகர்  செயற்பொறியாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.