தமிழக வெற்றி கழகம்: தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றி கழகம்: தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை, கட்சியின் தலைவர் விஜய் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

தூத்துக்குடி தொகுதி – ஸ்ரீநாத்

விளாத்திகுளம் தொகுதி – காசிராம்

ஓட்டப்பிடாரம் தொகுதி – மதன் ராஜா

கோவில்பட்டி தொகுதி – பாலசுப்பிரமணியன்

திருச்செந்தூர் தொகுதி – ஜே.கே.ஆர் முருகன்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி – சரவணன்

இந்த அறிவிப்பு வெளியாகியதுடன், தூத்துக்குடி மாவட்ட அரசியல் களம் மேலும் பரபரப்பாகியுள்ளது. முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், வாக்காளர்களின் கவனம் தற்போது தேர்தல் போட்டியின் மீது திரும்பியுள்ளது.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விரைவில் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.