தூத்துக்குடியில் வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை : போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை : போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் கூட்டுறவு வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி லெவஞ்சிபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (51). இவர் செபத்தையாபுரம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.