மார்ச் 1ல் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் : ஆட்சியர் தகவல்!

மார்ச் 1ல் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் : ஆட்சியர் தகவல்!

திருவைகுண்டத்தில் வருகிற மார்ச் 1ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான  மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் அனைத்து நலத்திட்ட உதவிகளும் பெறும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. 

அதில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அடையாள அட்டை, வங்கிக்கடன் மற்றும் உதவி உபகரணங்கள்  தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள்  01.03.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெறும் முகாமிற்க்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் கார்;டு, பாஸ்போட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல் மற்றும் விண்ணப்ப படிவத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.