திருச்செந்தூர் கோயில் இணை ஆணையரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் கோயில் இணை ஆணையரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். 

 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்காமல்  கோயில் இணை ஆணையர் கார்த்திக் தன்னிச்சையாக வாகன அனுமதி சீட்டில் கோட்டாட்சியர் கையொப்பம் இல்லாமல் முறைகேடாக அச்சடித்து வழங்கியதாகவும், இணை ஆணையர் கார்த்திக் தன்னிச்சையான செயல்பாடுகளை கண்டித்தும், அவர் மீது மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருச்செந்தூர் கோட்டாட்சியர்  அலவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். கோவில் இணை ஆணையர் கார்த்திக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர்  கலந்துகொண்டனர்.

Follow the தூத்துக்குடி செய்திகள் channel on WhatsApp: 
https://whatsapp.com/channel/0029VaEonJuLY6d05JM2IF2C