தூத்துக்குடியில் நள்ளிரவில் பயங்கரம்..! காவலரின் தாயை கொலை செய்து நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் நள்ளிரவில் பயங்கரம்..! காவலரின் தாயை கொலை செய்து நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

மெஞ்ஞானபுரம் அருகே காவலரின் தாயை கொலை செய்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தேரிப்பனையைச் சேர்ந்த ஜெயபால் மனைவி வசந்தா(70), நேற்று இரவு இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கொலையுண்ட மூதாட்டி வசந்தாவின் மகன் விக்ராந்த், நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.