தெப்பக்குளம் பழமை மாறாமல் மக்கள் பயன்பெறும் வகையில் முழுமையாக சீரமைக்கப்படும் – மேயர் ஜெகன் பெரியசாமி

தெப்பக்குளம் பழமை மாறாமல் மக்கள் பயன்பெறும் வகையில் முழுமையாக சீரமைக்கப்படும் – மேயர் ஜெகன் பெரியசாமி

தெப்பக்குளம் பழமை மாறாமல் முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் மேயா் ஜெகன் பொியசாமி குறைதீர்க்கும் முகாமில் தகவல்

      தூத்துக்குடி கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பழைய நகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் ப்ாியங்கா முன்னிலை வகித்தாா்.

     முகாமில் கிழக்கு  மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்.

    மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கிழக்கு மண்டலத்தில்  இதுவரை 19 முகாம்களில் 848 மனுக்கள் பெறப்பட்டு 832 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது 16 மனுக்கள் ஆய்வில் உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை பொருத்தவரை வாகனங்கள் பெருகி உள்ளதால் போக்குவரத்து அதிகரித்துள்ளது இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க இதுவரை 4000 புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது. குறுகிய தெருக்களிலும் பேவர் பிளாக் மற்்றும் தாா் சாலைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வாகனங்களை மாநகராட்சி பகுதியில் உள்ள விஇ ரோடு விவிடி ரோடு உள்பட அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்த வேண்டும். இது பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்கும். கிழக்கு மண்டலத்தில் 40 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட வடிகால்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியில் உள்ள வடிகால்கள் சீரமைக்கப்பட்டு உள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் பகுதியில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதை வல்லுநா்கள் ஆய்வின் கருத்துக்கிணங்க சிவன்கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. பழமை மாறாமல் பழுதுகள் முழுமையாக சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலை இருந்தது.  திமுக அரசு வந்த பிறகு அதை மாற்றி புதிய முத்துநகா் கடற்கரை பூங்காக்கள், மகளிர் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் என 53 எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி அமைத்துள்ளோம். கடற்கரை சாலையில் உள்ள படகு குழாம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனா். பெல் ஹோட்டலிருந்து அந்த கடற்கரை சாலை 8 கிலோமீட்டா்  குறிப்பாக மக்கள் நடை பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் நடைபயிற்சி தளம் அமைக்கப்பட்டு சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வருகிறோம். மக்கள் சாலையில் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் குறிப்பாக பக்கிள் ஓடை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்த்து தங்கள் வீடுகளுக்கு வரும் தூய்மை பணியாளிடம் குப்பைகளை சேகரித்துக் கொடுக்க வேண்டும் விடுபட்ட சாலைகள் போடும் பணியும் விரைவில் தொடங்கும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா். பின்னா் ஓருவருக்கு சான்றிதழ் வழங்கினாா். 

     நிகழ்ச்சியில் துணை மேயா் ஜெனிட்டா, நகரமைப்பு திட்ட செயற்பொறியாளா் வேலாயுதம்,  உதவி செயற்பொறியாளர்கள் முனீர்அகமது, நகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகா்,   உதவி பொறியாளர்கள் அனுசவுந்தா்யா, அபிலாவண்யா, நித்யகல்யாணி, ஹாிகிருஷ்ணன், தொழில்நுட்ப உதவியாளர்கள் சரன்பிரசாத், பிாின்ஸ் பிரதீப், ஆனந்தஜோதி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, ரெக்ஸ்லின், தனலட்சுமி, பேபி ஏஞ்சலின், மகேஸ்வாி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.