இரு சக்கர வாகன‌ம் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் படுகாயம்!!

உடன்குடியில் இரு சக்கர வாகன‌ம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

இரு சக்கர வாகன‌ம் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் படுகாயம்!!

உடன்குடியில் இரு சக்கர வாகன‌ம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். 

உடன்குடி தேரியூர் ஆண்டிவிளையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கட்டேரிபெருமாள் (வயது 25). இவர், உடன்குடி பஜாரில் உள்ள மாவு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9-ந்தேதி உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர் இரு சக்கர வாகன‌த்தில் சென்றுள்ளார். உடன்குடி பஜார் பகுதியில் சென்றபோது, உடன்குடி செல்வபுரத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகன‌ம், அவரது இரு சக்கர வாகன‌த்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகன‌த்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கட்டேரிபெருமாள் படுகாயம் அடைந்தார். 

7அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள தனியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.