தூத்துக்குடியில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - புதிய விதிகளை அறிமுகப்படுத்திய ஸ்விக்கி நிறுவனம்!!
தூத்துக்குடியில் வாரம் தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்திவிட்டு புதிய விதிகளை சுவிகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாரம் தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்திவிட்டு புதிய விதிகளை சுவிகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து அனைத்து சட்ட உரிமைகளும் வழங்கிட வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஊதிய முறை தொடர வேண்டும், சீனியாரிட்டியில் ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும், ஒரு கிலோமீட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும், ஒரு ஆர்டருக்கு மினிமம் 30 ரூபாய் வழங்க வேண்டும், பேட்ச் ஆர்டருக்கு ரூ.20 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் ஸ்விக்கியில் பனியாற்றகூடிய 120 உணவு விநியோக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் 1000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படாமல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.