விஷபாம்பு கடித்து பெண் பரிதாப பலி!
விஷபாம்பு கடித்து பெண் பரிதாப பலி!
எட்டயபுரம் அருகே வீட்டின் முன்பு தூங்கியபோது, பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி மனைவி பால்தாய் (55). இவர் தனது வீட்டு முன்பு பாய் விரித்து படுத்து தூங்கினாராம். அப்போது அவரது காலில் ஒரு விஷப்பாம்பு கடித்துள்ளது. இதில் அவர் உடலில விஷம் ஏறி சிறிது நேரத்து உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.