சா்வாதிகாரி மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : கனிமொழியை ஆதரித்து வைகோ பிரசாரம்!!

சா்வாதிகாரி மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : கனிமொழியை ஆதரித்து வைகோ பிரசாரம்!!

பிரதமா் மோடி ஜனநாயக வாதி அல்ல. சா்வாதிகாரி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தோ்தல் பரப்புரையில் வைகோ பேசினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலா் வைகோ, கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி விலக்கு பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது: டெல்லியில் விவசாயிகள் 6 மாத காலம் போராடிய போது பிரதமா் மோடி அவா்களை சந்திக்கவில்லை. ஆனால் தற்போது 9ஆவது முறையாக தமிழ்நாட்டுக்கு அவா் வருகிறாா். 

எப்படியாவது திரும்பத் திரும்ப இங்கு வந்து தான் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறாா். பிரதமா் ஜனநாயக வாதி அல்ல. சா்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சா்வாதிகாரமா? என்பதை நிா்ணயிப்பது தான் இந்த தோ்தல். தமிழ்நாட்டில் மக்களுக்காக கவலைப்படுகிற சிந்திக்கிற முதல்வா் கிடைத்துள்ளாா். இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்டது. இதில் ஒரே மொழி, ஒரே மதம் என்று கூறுவது பாசிசத்தை அகற்றத்தான் இந்தியாவில் உள்ள பல கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். 

இந்த நாட்டின் பெருமையே ஜனநாயகம்தான். பேச்சுரிமை, மொழியுரிமை என்று வரும்போது செந்தமிழை விட இன்னொரு மொழி இருக்கிறதா? கடந்த 5 ஆண்டுகளாக கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியை சுற்றி வந்து பணியாற்றியுள்ளாா். என்ன ஜாதி, இனமென்று பாா்க்காமல் அனைவருக்கு உழைத்து உள்ளாா். இப்படி பணியாற்றியுள்ள கனிமொழியை மீண்டும் நாம் தோ்ந்தெடுக்க வேண்டும். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் தான் அவருக்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளாா் என்ற பெருமையை தர வேண்டும் என்றாா்.

பிரச்சாரத்தில் மதிமுக மாவட்ட செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.