கூட்டு பாலியல் செய்யப்பட்ட இளம் பெண்ணிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!
கூட்டு பாலியல் செய்யப்பட்ட இளம் பெண்ணிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!
குரும்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மதுரை இளம்பெண்ணிற்கு நீதி கேட்டு சிபிஎம், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பேருந்து நிலையத்தில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி மதுரை மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி பகுதிக்கு செல்வதற்காக பேருந்தில் வந்துள்ளார். குரும்பூரில் இருந்து நாலுமாவடி செல்வதற்காக சுமார் 11:30 மணி ஆட்டோவில் சென்றுள்ளார். பெருங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அப்பெண் குரும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அவரது புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் தப்பிக்காமல் இருப்பதற்காக சட்டரீதியான தண்டனை வழங்க வேண்டும், ஜாமினில் வெளியே வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் கிடைத்திட வேண்டும், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் முழுமையான மருத்துவ கவுன்சிலிங் கொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் குரும்பூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சிபி எம் ஒன்றியக்குழு உறுப்பினர் தங்க ராஜ் தலைமை வகித்தார். சிபி எம் ஒன்றிய செயலாளர் ரவி சந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபி எம் ஒன்றியக்குழு உறுப்பினர் ராமசந்திரன், புலிராஜ், சந்திரசேகர், முத்தையா, நயினார், வேல்முத்து, மாதர் சங்க மாவட்ட தலைவர் கலைச் செல்வி, உறுப்பினர்கள் பார்வதி, விஜயராணி, எலிசபெத் ராணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.