தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு புதிய அமைப்பில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு!!

தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு புதிய அமைப்பில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு!!

தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு புதிய அமைப்பில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு!!

தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் புதிதாக அமைக்கப்படவுள்ள அமைப்புக்கு பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆணைக் குழுத் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். செல்வம்  வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  "தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் புதிதாக ‘லீகல் எய்ட் டிஃபன்ஸ் கவுன்சில் சிஸ்டம்’ என்ற அமைப்பு தொடங்கப்படவுள்ளது. 

இதில், அலுவலக உதவியாளா், வரவேற்பாளா் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்ற தகுதி வாய்ந்தோா் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை  தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற இணையதள பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், தூத்துக்குடி 628 003’ என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் இம்மாதம் 16ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.