ஒழுங்கினமாக நடந்ததால் ஆயுதப்படைக்கு மாற்றம் : காவல்துறையினருக்கு மன நல ஆலோசனை!

ஒழுங்கினமாக நடந்ததால் ஆயுதப்படைக்கு மாற்றம் : காவல்துறையினருக்கு மன நல ஆலோசனை!

ஒழுங்கினமாக நடந்ததால் ஆயுதப்படைக்கு மாற்றம் : காவல்துறையினருக்கு மன நல ஆலோசனை!

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் ஒழுங்கினமாக நடந்ததால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட காவல்துறையினருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அஜாக்கிரதையாகவும், அசட்டையாகவும் பணியில் ஒழுங்கினமாகவும் செயல்படும் பழக்க வழக்கங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக சில காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு, பணியிலிருந்து வரும்  காவலர்கள், அவர்களின் தவறை உணர்ந்து எதிர்காலத்தில் அவர்களை திருத்தி ஒழுங்கான முறையில் பணியாற்றி சமூகத்தில் காவல்துறையின் அந்தஸ்தை உயர்த்துவதற்காகவும், மக்களிடம் கனிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் மன நல மருத்துவர் சிவசைலம் மன நல ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் ஆயுதப்படைக்கு தண்டனையாக பணி மாற்றம் செய்யப்பட்ட காவல்துறையினருக்கு, அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி, அதனால் காவல்துறைக்கு சமுதாயத்தில் ஏற்பட்ட களங்கத்தையும் எடுத்துரைத்து, காவல்துறையில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல் உட்பட பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.