உட்கட்சி பிரச்சனையால் கலகலக்கும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக... மேயர் பெயரில் இருந்த கல்வெட்டு அதிரடி மாற்றம்..!
உட்கட்சி பிரச்சனையால் கலகலக்கும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக... மேயர் பெயரில் இருந்த கல்வெட்டு அதிரடி மாற்றம்..!
உட்கட்சி பிரச்சனையால் கலகலக்கும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக... மேயர் பெயரில் இருந்த கல்வெட்டு அதிரடி மாற்றம்..!
தூத்துக்குடி காதர் மீரான் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் மோசமான நிலையில் இருந்து வந்தது அங்கு புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி கவுன்சிலரும் அதிமுக கொறோடாவுமான வக்கீல் மந்திர மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தார். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அதனை கட்டிக் கொடுக்குமாறு ஆட்சியர் பரிந்துரைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் தொகுதி மேம்பாட்டு நதியில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா பணிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். கல்வெட்டில் மாநகராட்சி மேயர், ஆட்சியர், கமிஷனர், துணை மேயர், மண்டல தலைவர், வார்டு கவுன்சிலர் பெயர் போட்டு கல்வெட்டு தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
பின்னர் சில நாட்களில் கல்வெட்டில் இருந்து மேயர் ஜெகன் பெரியசாமி, கவுன்சிலர் மந்திரமூர்த்தி ஆகியோர் பெயரை மட்டும் நீக்கி மீண்டும் கல்வெட்டு தயாரித்து அங்கன்வாடி மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சருக்கும் , மேயருக்கும் இடையே பணி போர் ஏற்பட்டும் மோதல் போக்கு இருப்பதாக திமுகவினர் பேசி வந்த நிலையில். தற்போது கல்வெட்டு பிரச்சனையால் உச்சகட்ட மோதல் வெளியே தெரிய துவங்கி விட்டது என திமுக வினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்றைய தினம் அமைச்சர் பெயரில் வைக்கப்பட்ட புதிய கல்வெட்டும் தற்போது அப்புற படுத்தப்பட்டுள்ளது. இதனை அப்புறப்படுத்தியது யார் என்பது தெரியவில்லை.