தூத்துக்குடி மாநகராட்சியில் காய்ச்சல் சிறப்பு முகாம் : 1099 நபர்களுக்கு பரிசோதனை!

தூத்துக்குடி மாநகராட்சியில் 21 பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. 1099 நபர்கள் இம்முகாம் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் காய்ச்சல் சிறப்பு முகாம் : 1099 நபர்களுக்கு பரிசோதனை!

தூத்துக்குடி மாநகராட்சியில் 21 பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. 1099 நபர்கள் இம்முகாம் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் தற்போது நிலவிவரும் தட்ப வெட்ப நிலை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகின்றன. இதன் அறிகுறிகள் காய்ச்சல், இருமல் உடம்பு வலி, தலைவலி, ஜலதோசஷம், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ளன. இந்த வகையான காய்ச்சல் 4 நாட்கள் முதல் 7 நாட்கள் வரையும் அல்லது 2 வாரம் முதல் நான்கு வாரங்கள் வரை தொடர்கின்றன. 

இவ்வகையான தொற்றுநோய்களை கட்டுபடுத்தும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 1000 சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்துவதற்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் இம்மாநகராட்சிக்குட்பட்ட 7 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 1 ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 3 வீதம் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் என மொத்தம் 21 பகுதிகளில் இக்காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.  இவற்றில் 1099 நபர்கள் இம்முகாம் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளனர். 

சளி இருமல் 316 நபர்கள் டையேரியா 44 நபர்கள் மற்றும் பொதுவான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் RBSK Team மூலம் 10 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு நபர்களுக்கு பரிசோதனை 238 செய்யப்பட்டதில் 7 நபர்களுக்கு காய்ச்சல் 30 நபர்களுக்கு சளி இருமலுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என மேற்படி மருத்துவ முகாம் நடத்தப்பட்ட பகுதிகளிலுள்ள 6 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலும் ஆய்வு செய்யப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.