முத்தையாபுரம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி  முள்ளக்காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் அனிதா (21). பி.காம் பட்டதாரி. இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனிதா தனக்கு தற்பொழுது திருமணம் வேண்டாம் என்று கூறி வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.