ஓய்வு பெறும் நாளில் வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் பணி இடைநீக்கம்!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் அசோகனை பணிநீக்கம் செய்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஓய்வு பெறும் நாளில் தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் அசோகனை பணிநீக்கம் செய்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அசோகன் தூத்துக்குடி மாநகராட்சியில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலத்தில் கடந்த 2013 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மாநகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்த போது 2013ஆம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டுகளில் அசோகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூபாய் 3 கோடியே 30 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அசோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வந்த அசோகன் ஜனவரி 31ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் ஓய்வு பெறும் நாளில் அசோகனை நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் மாநகராட்சி பொறியாளர் ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.