சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத் தொகை: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு!

தூத்துக்குடியில் சொத்து வரியினை அக்.30ம் தேதிக்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகைப் பெற்று பயனடையுமாறும் பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் 2023 பிரிவு 268ன்படி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி முதல் அரையாண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலும், இரண்டாவது அரையாண்டு அக்டோபர் 1 முதல் மார்ச் 31ம் தேதிக்குள்ளும் செலுத்தப்பட வேண்டும். 

அவ்வாறு காலத்தில் செலுத்தப்படாவிட்டால், அரையாண்டு சொத்துவரிக்கு கூடுதலாக சொத்துவரி செலுத்தப்படும் வரை அத்தகைய அரையாண்டு வரிக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சதவீத வட்டி விகிதத்தில் வட்டி விதிக்க வேண்டும் எனவும், அரையாண்டுகளுக்கான சொத்துவரி அரையாண்டு தொடங்கிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்பட்டால் உரிமையாளர்களுக்கு 5% ஊக்க தொகை வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2023-2024 நடப்பு முதல் அரையாண்டு சொத்துவரியினை செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தி, வட்டி விதிக்கப்படுவதை தவிர்க்குமாறும், இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியினை அக்டோபர் 30ம் தேதிக்குள் செலுத்தி 5% ஊக்கத்தொகைப் பெற்று பயனடையுமாறும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.