தூத்துக்குடி அருகே ப்ளாட்பார்மில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை: இளைஞா் கைது!!
தூத்துக்குடி மையவாடி அருகே ப்ளாட்பார்மில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக் கொன்ற வழக்கில் இளைஞரைப் போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மையவாடி அருகே ப்ளாட்பார்மில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக் கொன்ற வழக்கில் இளைஞரைப் போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலை, மையவாடி அருகே சுமார் 30 வயது இளைஞா் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தியதில் சடலமாகக் கிடந்தவா் சாந்தி நகரைச் சோ்ந்த காா்த்திக் (35) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அவரை விட்டுப் பிரிந்து வேலைக்கு சென்று விட்டு மையவாடி அருகே தினசரி இரவு படுத்து தூங்குவாராம்.
இதுபோல் நேற்று இரவு கார்த்திக் படுத்து தூங்கும் இடத்தில் வேறு ஒரு வாலிபர் படுத்து தூங்கினாராம். இதில் ஏற்பட்ட தகராறில் கார்த்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி செல்சீனி காலனியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மாரி கண்ணன் (24), காா்த்திக்கை கம்பியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.