NTPL ஒப்பந்த ஊழியர்கள் 2 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் - 1200 பேர் பங்கேற்பு: 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு..!

தூத்துக்குடி மத்திய அரசின் கீழ் செயல்படும் என் டி பி எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 1200 ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான என் டி பி எல் ஆனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அனல்மின் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர் இந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய என் டி பி எல் நிர்வாகம் மறுத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து நேற்று முதல் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஒப்பந்த ஊழியர்களுக்கு என்எல்சி யில் வழங்கப்படுவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் ,இஎஸ்ஐ, பிஎப் படித்தம் செய்ய வேண்டும், மேலும் என் டி பி எல் யில் பணிபுரியும் தொழிலாளருக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல்வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இன்று இரண்டாவது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என் டி பி எல் அனல் மின் நிலையம் முன்பு சுமார் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் என் டி பி எல் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஒப்பந்த ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெற்றால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.