கோவில்பட்டியில் காவல் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா!

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

கோவில்பட்டியில் காவல் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா!

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. 

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அருள்மொழி (வயது 30). இவருடைய கணவர் சதீஷ் (வயது 34), கழுகுமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நேரடியாக தேர்ச்சி பெற்று பணியாற்றி வருகின்றனர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அருள்மொழிக்கு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சக காவலர்கள் நேற்று வளைகாப்பு விழா நடத்தினர். 

 

வீட்டில் உறவினர்கள் சூழ்ந்து வளைகாப்பு விழா நடத்துவது போன்று காவலர்கள் அருள்மொழிக்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமமிட்டு, சீர்வரிசை பொருட்கள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி வாழ்த்தினர். விழாவில் கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சுஜீத் ஆனந்த், மங்கையர்கரசி மற்றும் போலீசாரும் கலந்து கொண்டு தம்பதியரை வாழ்த்தினர்.