கள்ளக்குறிச்சி ஆட்சியரை கண்டித்து தூத்துக்குடியில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய வட்டாட்சியர் மனோஜ் முனியனை உள்நோக்கத்தோடு அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ‌ரவன் குமார் ஜடாவத் அவர்களின் ஊழியர் விரத நடவடிக்கைகளையும், இதனை திசை திருப்பும் மேற்கொண்டு வரும் பாரபட்சமான மூன்றாம் தர நடவடிக்கைகளையும் கண்டித்தும், பெண் அலுவலர்களை ஒருமையில் தரை குறைவாக பேசி, அவமதித்து அரசு நிர்வாகத்தில் அத்துமீறி அடாவடியாக தலையிட்டு வரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்த் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சாம் டேனியல் ராஜ் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் மாநில துணைத்தலைவர் செந்தூர் ராஜன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஞானராஜ் நிறைவுரையாற்றினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளைச் செயலாளர் தவமணி பீட்டர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.