குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் பங்கேற்பு..!

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் பங்கேற்பு..!

தூத்துக்குடியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (12.06.2024), குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் துறையின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தொழிலாளர் துறை உதவி ஆணையர்(அமலாக்கம்) மின்னல்கொடி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.