தூத்துக்குடி அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி: போலீஸ் விசாரணை!
தூத்துக்குடி அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மூதாட்டி ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மூதாட்டி ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி - மீளவிட்டான் ரயில் நிலையங்கள் இடையே கிங் ஆப் கிங் ஸ்கூள் பின்புறம் அமைந்துள்ள இரயில்வே தண்டவாளத்தில் சுமார் 70 வயது மதிக்கப்பட்ட பெண் நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவல் பேரில் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் இறந்தவர் சாமியம்மாள் (வயது 70) க/பெ சுப்புராஜ்(லேட்) மகிழ்ச்சிபுரம் மேற்கு அண்ணா நகர் ,தூத்துக்குடி என்பது தெரிய வந்தது. இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து தண்டவாளத்தை கடந்து சின்னகண்ணுபுரத்தில் அமைந்துள்ள டீக்கடைக்கு செல்லும் வழியில் தண்டவாளத்தினை கவனக்குறைவாக கடக்க முயற்சித்த போது தூத்துக்குடி நோக்கி வந்த ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேற்படி உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச் சம்பவம் குறித்து சாமியம்மாள் மகன் குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உதவி ஆய்வாளர் மகா கிருஷ்ணன் விசாரணை செய்து வருகிறார்.