வக்கீல் குமாஸ்தா தலை துண்டித்து கொடூர கொலை : தூத்துக்குடியில் பயங்கரம்!
தூத்துக்குடியில் வக்கீல் குமாஸ்தா தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் பால்ராஜ் (50). இவர் வக்கீல் குமாஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை மத்தியபாகம் காவல் நிலையம் அருகே கிரேட் காட்டன் சாலையில் உள்ள ஒரு பேட்டையில் பால்ராஜ் துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மத்திய பாகம் போலீசார் பால்ராஜின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து சங்கரப்பேரியைச் சேர்ந்த பால்சாமி மகன் ஜெயராம் (27), முத்துகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கந்த சுப்பிரமணியன் (28) ஆகிய 2பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் 2பேர் மீதும் கஞ்சா வழக்குகள் உள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட பால்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. கஞ்சா வாங்கித் தருவதாக ரூ.25ஆயிரம் பணம் வாங்கிவிட்டு கஞ்சாவை வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி
யள்ளது.