ஓடும் பேருந்தில் கண்டக்டரை தாக்கி பணப்பை பறிப்பு : 3பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஆத்தூர் அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து கண்டக்டரை தாக்கி பணப்பையை பறித்துச் சென்ற 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆத்தூர் அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து கண்டக்டரை தாக்கி பணப்பையை பறித்துச் சென்ற 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தை புதுக்கோட்டை அல்லிக்குளத்தைச் சேர்ந்த டிரைவர் பட்டுராஜ் (45) ஓட்டிச் சென்றார். அந்த பேருந்தில் திருநெல்வேலி கேடிசி நகரைச் சேர்ந்த குருசாமி மகன் ராமசாமி என்பவர் கண்டக்டராக இருந்தார். பேருந்தில் 45 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து பகல் 12.15 மணியளவில் பழைய காயல் அருகே சென்றபோது பைக்கில் வந்த 3பேர் பேருந்தை வழிமறித்து ஏறியுள்ளனர்.
தினசரி அப்டேட்களை பெற இப்போதே டவுன்லோடு செய்யுங்கள்.... https://play.google.com/store/apps/details?id=com.maac.tutyvision
பின்னர் அவர்கள் கண்டக்டரை செருப்பால் அடித்து, அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்றுவிட்டனர். அந்த பையில் ரூ.11,500 பணம் இருந்துள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.