தூத்துக்குடியில் உள்ள துபாய் போர்ட் வேர்ல்ட் தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் மூடை விழுந்து தொழிலாளி பலி : உறவினர்கள் குடோன் முன்பு மறியல் ... பரபரப்பு..!!

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள துபாய் போர்ட் வேர்ல்ட் என்ற தனியார் ஏற்றுமதி நிறுவன குடோனில் நேற்று மாலை வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது மூடை சரிந்து விழுந்து கண்ணன் என்ற தொழிலாளி பரிதாபமாக பலி உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தனியார் குடோன் முன்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகா இளவேலங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள துபாய் போர்ட் வேர்ல்ட் என்ற கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்  இந்நிலையில் நேற்று மாலை குடோனில் மூடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என சரி பார்க்கும்போது மூடை சரிந்து விழுந்ததில் அதில் கண்ணன் சிக்கி கழுத்துப் பகுதியில் மூடை விழுந்ததன் காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர் கண்ணனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக டிபி வேர்ல்ட் வேர்ல்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கண்ணனுக்கு இஎஸ்ஐ பிஎப் இன்சூரன்ஸ் போன்ற சலுகைகள் இல்லாதால்இழப்பீடு வழங்காமல்  காலம் தாழ்த்தி வருகிறது

இதைத்தொடர்ந்து மூடை சரிந்து பலியான தொழிலாளி கண்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தொழிலாளர் துறை ஆகியவை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இளவேலங்கால் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கத்தினர் டிபி வேர்ல்ட் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது