விளாத்திகுளம் அருகே தொடரும் சாதி பாகுபாடு : ரேஷன் கடை கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு!
சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் சாதி பாகுபாடு பிரச்சனை உள்ளதால் ரேஷன் கடை கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் அளித்துள்ள மனு : விளாத்திகுளம் அருகே சித்தவ நாயக்கன்பட்டி கிராமத்தில் நாயக்கர் தெருவில் புதிய நியாய விலைக் கடை கட்ட அரசு நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் எஸ்.சி., மக்கள் காலில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருப்பதால் எஸ்.சி., மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே கிராம நிர்வாக அலுவலகம் அருகே போதுமான இடம் உள்ளதால் நியாய விலைக் கடை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.