படைவீரர் கொடி நாளை முன்னிட்டு ஆட்சியர் நன்கொடை வழங்கினார்..!

படைவீரர் கொடி நாளை முன்னிட்டு ஆட்சியர் நன்கொடை வழங்கினார்..!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் படை வீரர் கொடி நாளை முன்னிட்டு கொடி நாள் நிதி ஆட்சியர் வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், படை வீரர் கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி டிச.7ம் தேதி இன்று கொடி நாள் நிதியினை வழங்கினார்.

இதில், உதவி இயக்குநர் முன்னாள் படை வீரர் நலன் தெய்வசிகாமணி உடன் இருந்தார்.