தூத்துக்குடியில் தேர்தல் சோதனை தீவிரம்! ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடியில் தேர்தல் சோதனை தீவிரம்! ஆட்சியர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் ரவுண்டானா அருகில் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனை நடவடிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.03.2026) நேரில் பார்வையிட்டார்.அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சி. மதன், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.