தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு நோட்டீஸுக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு நோட்டீஸுக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தூத்துக்குடி மாநகராட்சியில் 2024 - 2025 ஆண்டுக்கான உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி நோட்டீஸுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தி வழங்கப்பட்ட நோட்டீஸ்க்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என யர்நீதிமன்ற மதுரை கிளையில் முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் படி 5 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சொத்து வரிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.