தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீது அதிரடி சோதனை: ரூ.13,000 அபராதம் – 240 கிலோ பறிமுதல்

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீது அதிரடி சோதனை: ரூ.13,000 அபராதம் – 240 கிலோ பறிமுதல்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட மட்டக்கடை மற்றும் WGC சாலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (Single Use Plastic - SUP) பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சோதனையின் போது 240 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (SUP) பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை உரிய முறையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்களும், வணிகர்களும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், விதிமீறல் கண்டறியப்பட்டால் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி, நகரை பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.