காமராஜர் பிறந்தநாள்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முத்தையாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காமராஜர் பிறந்தநாள்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முத்தையாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பல்க் பஜாரில், பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் SDR. சாமுவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இலவச சேலைகளையும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மத்திய மாவட்ட தெற்கு பகுதி செயலாளர் ஆ. இசக்கிமுத்து செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் தெற்கு பகுதி இணைச் செயலாளர் சிங்காரவேல், தெற்கு பகுதி பொருளாளர் ஆனந்தராஜ், தெற்கு பகுதி துணைச் செயலாளர் தேவேந்திரன், தெற்கு பகுதி செயற்குழு உறுப்பினர்கள் முருகன், குமார், கனகராஜ், சரவணகுமார், சுயம்புலிங்கம், அஜீஸ், அபிஷேக், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், 52-வது வார்டு வட்டச் செயலாளர் தினேஷ்பாபு, 54-வது வார்டு வட்டச் செயலாளர் வெங்கடேஷ், 60-வது வார்டு வட்டச் செயலாளர் ரொமான்ஸ் உள்ளிட்ட மகாராஜன், பொன்ராஜ், பிரபா, ராஜேஷ்குமார், சந்தோஷ், சேக், பால்ராஜ், சந்தனராஜ் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.