தூத்துக்குடியில் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு: மேயர், எஸ்,பி, டி ஆர் ஓ பங்கேற்பு!
தூத்துக்குடியில் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு: மேயர், எஸ்,பி, டி ஆர் ஓ பங்கேற்பு!
தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச அளவில் குழந்தை தொழிலாளர்களை தொழில் நிறுவனங்களிலும், வியாபார நிறுவனங்களிலும் பணியில் அமர்த்த கூடாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதை முறையாக கடைபிடிக்க ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுத்து வருகின்றனர். அதன்அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர் நல அலுவலர் சுமதி, உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரங்கநாதன், ராமச்சந்திரன், அதிகாரிகள் காந்திமதி, ராஜபாண்டி, ராஜசேகர், ஹரிகணேஷ், ஸ்டாலின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல்துறை
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நானாள இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் காவல் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு ‘குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள்” உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதில் மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம், மாவட்ட கட்டுபாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட ஆவண காப்பகப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு உட்பட காவல்துறையினர் மற்றும் காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் ராமசுப்பிரமணிய பெருமாள், குமார், அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், மயில்குமார் ராபர்ட் உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆட்சியர் அலுவலகம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தொழிலாளர் நலத்துறை சார்பில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தைபொட்டி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஒட்டு வில்லையை மாவட்ட வருவாய் அலுவலர் வாகனத்தில் ஒட்டினார். இந்நிகழ்வில் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.