தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது!

தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது!

தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தானர். 

தூத்துக்குடி, மேலவேலாயுதபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (23). இவர் மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். சம்பவத்தன்று இவர் தாளமுத்துநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அரிவாளை காட்டி தகராறில் ஈடுபட்டு உள்ளார். 

தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று பிரவீன்குமாரை பிடிக்க முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த அவர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்றார். இதையடுத்து பிரவீன் குமாரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரை கைதுசெய்து தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.