போல்டன்புரம் பொதுமக்கள் புகார் கழிவுநீர் கால்வாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டது மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

போல்டன்புரம் பொதுமக்கள் புகார் கழிவுநீர் கால்வாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டது மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

      தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைக்காலங்களில் சில தெருக்களில் கழவுநீர் வழித்தடங்களில் கழிவு நீர் செல்லாமல் வீடுகளில் தேங்கி இருப்பதாக 36வது வாா்டுக்குட்பட்ட போல்டன்புரம் பகுதி பொதுமக்கள் மேயர் ஜெகன் பொியசாமிக்கு புகார் அளித்தனர் 

    இதனையடுத்து போல்டன்புரம் மூன்றாவது தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜபாண்டிக்கு உத்தரவிடப்பட்டது அதன் அடிப்படையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி சுகாதாரத்துறை அலுவலா்கள் மற்றும் பணியாளர்களுடன் நேரில் சென்று அந்தப் பகுதியை பார்வையிட்ட போது கழிவு நீர் செல்லும் வழித்தடங்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு மணல் தேங்கி அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது உடனடியாக மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மணல்களை அப்புறப்படுத்த களத்தில் இறங்கினார்கள். சுமார் 20 அடி நீளத்துக்கு கழிவுநீர் வழித்தடத்தில் 5 அடிக்கு மேல் தேங்கியிருந்த மணல் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டது அந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி நேரில் சென்று பார்வையிட்டார். 

    அப்போது தொடர்ந்து இந்தப் பகுதி முழுவதும் கழிவு நீர் வழித்தடத்தில் உள்ள அடைப்புகளை முழுவதுமாக சரி செய்ய வேண்டும் தேங்கி கிடக்கும் கழிவுகளை முழுவதும் அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அங்கு பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்களை பாராட்டி இதுபோல் பணிகளை உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது தைரியத்துடன் பணிகளை செய்து கான்அடைப்புகளை சரி செய்து உள்ளீர்கள் என்று பணிகளில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை மேயர் ஜெகன் பொியசாமி பாராட்டினார்.

ஆய்வின் போது வட்டச்செயலாளர் ரவீந்திரன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.