மாதாந்திர மின் பராமரிப்பு பணி: ஜூன் 16-ல் தூத்துக்குடி மாநகரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

மாதாந்திர மின் பராமரிப்பு பணி: ஜூன் 16-ல் தூத்துக்குடி மாநகரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஜூன் 16 (செவ்வாய்க்கிழமை) அன்று குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோகத்திற்கான முக்கிய ஆதாரங்களான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக, ஜூன் 16 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதால், அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் திருமதி சி. பிரியங்கா, இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.

மின்சார பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.