தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படும்... தூத்துக்குடி புதிய எஸ்பியாக பதவியேற்ற ஆல்பர்ட் ஜான் பேட்டி...!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக இருந்த பாலாஜி சரவணன் கோயம்புத்தூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றி வந்த ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டார்.. இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆல்பர்ட் ஜான் பதவியேற்று கொண்டார்..
இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி புதிய எஸ்பி ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், சமூகம் சார்ந்த பிரச்சினை மற்றும் ஜாதி ரீதியான பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும்.. போதை பழக்கம் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்...தூத்துக்குடி கடலோர பகுதியில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது.. இதனை கட்டுக்குள் கொண்டு வரப்படும்.. முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி சட்டம், ஒழுங்கு அனைத்தும் சீர் செய்யப்படும்...சட்டப்படி குற்றம் செய்யும் நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவது மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வழி வகை செய்யப்படும் என்றார்..
முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த எஸ். பி ஆல்பர்ட் ஜான் ஆயுதப்படை காவலரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், பூங்கொத்து கொடுத்து அவரை இன்முகத்துடன் வரவேற்றனர் காவல்துறையினர்.....
மேலும், பொதுமக்களின் மனுக்களை பெறுவதற்கு வாரந்தோறும் நடைபெறக்கூடிய பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். . ஏற்கனவே அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியதால் அது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து ஏற்கனவே விசாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை தனக்கு தர வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்....
தூத்துக்குடி மாவட்டத்தின் 33-வது எஸ் பி யாக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.