திருச்செந்தூர் கடலில் நீராடியபோது காயம் அடைந்த பெண் பத்திரமாக மீட்பு!

திருச்செந்தூா் கோவில் கடலில் நீராடியபோது காயம் அடைந்த பெண்ணை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் சென்னை கேகே நகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (45) மற்றும் குடும்பத்தினர்கள் கடலில் நீராடிய பொழுது ஜெயலஷ்மிக்கு வலது காலில் அடிபட்டு வலியால் துடித்தார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மிவானி, சதீஷ், தலைமை காவலர் மாரியப்பன் ஆகியோர் அந்தப் பெண்ணை கடற்கரையில் இருந்து மீட்டனர்.
பின்பு உடனடியாக கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். திருக்கோவில் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை முதலுதவி மையம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவி செய்தனர்.